உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாளை வருதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா

நாளை வருதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா

எருமப்பட்டி:சேந்தமங்கலம் வருதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா, நாளை நடப்பதையொட்டி, தேருக்கு அலங்காரம் செய்யும் பணி நடந்தது.சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், மாசி மாத தேர்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு மாசி தேர் திருவிழாவிற்கான கொடியேற்று விழா, 16ல் நடந்தது. தொடர்ந்து, தினமும் சோமேஸ்வரர், வருதராஜபெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிம்ம, கருட, ரிஷப வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், நாளை மற்றும் 25ல் வருதராஜ பெருமாள் கோவில் பெரிய தேர் வடம் பிடித்து நிலை சேர்தல் விழாவும், 26ல் சோமேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவும் நடக்கிறது. இதற்காக, தேர் சுத்தம் செய்யப்பட்டு, தோரணங்கள் கட்டும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ