தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர் திறந்து வைப்பு
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, சூரிய கவுண்டம்பாளையம் பாரத் கல்வி அறக்கட்டளை கட்டட வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு தொழில் பயிற்சி நிலையத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். கலெக்டர் துர்காமூர்த்தி, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், பரமத்தி வேலுார் முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குனர் அமலா ரெக்சலின், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் பார்த்தீபன், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.