உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துணை ஜனாதிபதியுடன் முதல்வர் சந்திப்பு

துணை ஜனாதிபதியுடன் முதல்வர் சந்திப்பு

மதுரை, மதுரையில் அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் நேற்று இரவு சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்.தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு நேற்று இரவு 10:30 மணிக்கு வந்தடைந்தார், முதல்வர் ஸ்டாலின். அங்கு ஏற்கனவே தங்கியிருந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அறைக்கு சென்று சால்வை அணிவித்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இருவரும் கை குலுக்கிக் கொண்டு ஒருவரையொருவர் நலம் விசாரித்து சில நிமிடங்கள் பேசினர்.அப்போது அமைச்சர்கள் நேரு, பெரியசாமி, தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், எம்.பி., கனிமொழி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி