உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாயை விரட்டியதால் கைகலப்பு: ஒருவர் கைது

நாயை விரட்டியதால் கைகலப்பு: ஒருவர் கைது

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை, பெரியமணலி பிரிவு சாலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 42. இவரது வீட்டில் வளர்க்கும் நாய், கடந்த, 17 இரவு, 11:00 மணியளவில், அவரது வீட்டின் அருகே வசிக்கும் சேகரன், 55, என்பவரின் வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதைப்பார்த்த சேகரன், நாயை விரட்டியுள்ளார். அப்போது அங்கிருந்து செந்தில்குமார், 'எப்படி எனது நாயை விரட்டலாம்' என கேட்டார். இதனால், சேகரனுக்கும், செந்தில்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, செந்தில்குமாருக்கு ஆதரவாக, வையப்பமலை, மலைக்காலஅம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 32, என்பவர் பேசியுள்ளார். இதில், ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டி, கை கலப்பும் ஏற்பட்டது.இதில், சேகரனுக்கும், செந்தில்குமாருக்கும் உள்காயம் ஏற்பட்டது. சேகரன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையிலும், செந்தில்குமார் ராசிபுரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேகரன் அளித்த புகார்படி, சதீஷ்குமார் மீது நேற்று, எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்