ராசிபுரம்: தமிழகத்தில் கடந்தாண்டு, 'மக்களுடன் முதல்வர்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தாண்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ராசிபுரம் ஒன்றியத்தில், 5 நாட்கள் முகாம் நடக்கவுள்ளது. முகாம் காலை, 10:00 மணிக்கு தொடங்கி, 3:00 மணி வரை நடக்கும். வரும், 11ல் வடுகம் பார்கவ குல திருமண மண்டபத்தில் முகாம் நடக்கிறது. இதில், பட்டணம் முனியப்பன்பாளையம், மலையாம்பட்டி, வடுகம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும். 23ல் கவுண்டம்பாளையம், மீனாட்சி மஹால் மண்டபத்தில் நடக்கும் முகாமில், முத்துகாளிப்பட்டி, அணைப்பாளையம், கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி கிராம மக்கள் மனுக்களை அளிக்கலாம். ஆக., 1ல் கூனவேலம்பட்டி, பழையபாளையம் திருமண மண்டபத்தில் நடக்கும் முகாமில், குருக்கபுரம், பொன்குறிச்சி, பொன்.ஆயிபாளையம், ஆர்.கொமராபாளையம், கூனவேலம்பட்டி கிராம மக்கள் மனுக்களை அளிக்கலாம்.ஆக., 13ல் போடிநாயக்கன்பட்டி விக்னேஷ் திருமண மண்டபத்தில் நடக்கும் முகாமில், காக்காவேரி, கோனேரிப்பட்டி, அரசம்பாளையம், போடிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்கள் பயன்பெறலாம். ஆக., 22ல் சிங்களாந்தபுரம் பெருமாள் கோவில் மண்டபத்தில் நடக்கும் முகாமில், சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், கனகபொம்மன்பட்டி கிராம மக்கள் பயன்பெறலாம்.