குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, அருவங்காடு அரசு உயர்நிலை பள்ளியில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். கண்காட்சி அமைப்பாளர் தாமரைராஜ், 25, கூறுகையில், ''10 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்கால நாணயங்கள் சேகரித்து வருகிறேன். என்னிடம், 120-க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், அஞ்சல் தலைகள், அஞ்சல் அட்டைகள், போர்க்கால ஆயுதங்கள், குத்துக்கத்தி, கட்டாரி, ஈட்டி, வால்வு ரேடியோ, பழைய, 'டிவி', பழைய சுவர் கடிகாரங்கள், பழைய கேமராக்கள், அஞ்சறைப்பெட்டி, இசைத்தட்டுக்கள், 200 வருட முந்தைய பூட்டுக்கள், பெட்ரோமாக்ஸ் லைட், லாந்தர், சிம்னி விளக்கு, பீரங்கி குண்டு, கால் சிலம்பு, டெலிபோன், பழைய பாட்டில்கள், பாக்கு வெட்டி, மை கோதி, 1835 முதல், 1947 வரையிலான பத்திரங்கள், பழைய டூவீலர்களான மோபா, ராஜ்துாத், லுானா, அவந்தி, சுவேகா உள்ளிட்ட பழமையான பொருட்கள், பல வகை நினைவுப்பொருட்களை சேகரித்து வைத்துள்ளேன். இதுவரை, 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சென்று, காட்சிப்படுத்தி உள்ளேன்,'' என்றார்.இந்த கண்காட்சியை, மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் ரசித்து, சந்தேகங்களை தெரிந்துகொண்டனர்.