மரவள்ளி அறுவடை தீவிரம் விலை சரிவால் கவலை
வெண்ணந்துார்: வெண்ணந்துார் ஒன்றியத்திற்குட்பட்ட மின்னக்கல், நாச்சிப்பட்டி, அளவாய்ப்பட்டி, ஓ.சவுதாபுரம், பழந்திண்ணிப்பட்டி, அத்தனுார், தேங்கல்பாளையம், கல்லாங்குளம், ஆர்.புதுப்பாளையம், கட்ட-னாச்சன்பட்டி ஆகிய பகுதிகளில் பரவலாக மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர் மழையால், கிழங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை இருந்ததால், விவசாயிகள் அறுவ-டையில் கவனம் செலுத்தினர். இந்நிலையில், மரவள்ளி கிழங்-கிற்கு போதுமான விலை இல்லாமல், குறைந்த விலையில் விவ-சாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கடந்த மாதம், மரவள்ளி கிழங்கு டன், 8,500 ரூபாய்க்கு விற்றது. தற்-போது விலை சரிந்து டன், 5,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் செலவு செய்த தொகைக்கூட எடுக்க முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.