உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கலப்படத்திற்கு வைத்திருந்த சர்க்கரை அதிரடியாக பறிமுதல்

கலப்படத்திற்கு வைத்திருந்த சர்க்கரை அதிரடியாக பறிமுதல்

ப.வேலுார் : நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் தாலுகாவில் அமைந்துள்ள கபிலர்மலை, ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம் பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி சோதனை நடத்தினர். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில், வெல்லத்தில் கலப்படம் செய்ய வைத்திருந்த, 2,000 கிலோ சர்க்கரை மற்றும் நிறத்திற்காக பயன்படுத்தப்படும் ரசாயனத்தை பறிமுதல் செய்தனர். அவற்றை வைத்திருந்த மூன்று ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.மேலும், 'கரும்பாலை உரிமையாளர்கள், உணவு பாதுகாப்பு உரிமை பெற வேண்டும்; கரும்பாலையில் பணிபுரிபவர் மருத்துவ சான்று பெற வேண்டும்; வளாகத்தில் 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும். நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரிக்கும் போது கட்டாயமாக அஸ்கா சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்கள் கலப்படம் செய்யக் கூடாது' என எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை