உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குணமடைந்து வீடு திரும்பிய போலீசார்: எஸ்.பி., வாழ்த்து

குணமடைந்து வீடு திரும்பிய போலீசார்: எஸ்.பி., வாழ்த்து

குணமடைந்து வீடு திரும்பியபோலீசார்: எஸ்.பி., வாழ்த்துநாமக்கல், அக். 5-கேரளா மாநிலம், திருச்சூரில், கடந்த, 27ல் ஏ.டி.எம்.,களில் கொள்ளையடித்துவிட்டு, கன்டெய்னர் லாரியில் கொள்ளையர்கள் தப்ப முயன்றனர். அவர்களை, பள்ளிபாளையம், வெப்படை செட்டியார் காடை அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது, கொள்ளையர்கள் போலீசாரை தாக்கினர். இதில், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., ரஞ்சித்குமார் படுகாயமடைந்தனர். அவர்கள், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், கோவை மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், சேலம் டி.ஐ.ஜி., உமா ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.கடந்த, 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., ரஞ்சித்குமார் ஆகியோர் குணமடைந்தனர். இதையடுத்து, நேற்று, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். அப்போது, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், திருச்செங்கோடு டி.எஸ்.பி., இமயவர்மன், குமாரபாளையம் பொதுமக்கள் சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும், வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி