உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.23 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

ரூ.23 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

நாமக்கல்: நாமக்கல் தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 23 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்-பனை சங்கம் செயல்படுகிறது. அங்கு வாரந்-தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடக்-கிறது. அதன்படி, நேற்று நடந்த ஏலத்திற்காக பல்-வேறு பகுதியில் இருந்து வந்த விவசாயிகள், 29.92 மெட்ரிக் டன் எடை உள்ள, 820 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்-தனர்.அதில், ஆர்.சி.எச்., ரக பருத்தி, 100 கிலோ, 7,899 ரூபாய் முதல் 8,339 ரூபாய் வரையிலும், கொட்டு மட்ட ரகம், 4,499 ரூபாய் முதல், 4,899 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 23 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை