உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுாரில் மீண்டும் சுடுகாடு பிரச்னை போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம்

ப.வேலுாரில் மீண்டும் சுடுகாடு பிரச்னை போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம்

ப.வேலுார், ப.வேலுார் அருகே, வெங்கரை டவுன் பஞ்.,க்கு உட்பட்ட திட்டமேடு மற்றும் கள்ளிபாளையத்தை சேர்ந்த, இரண்டு கிராமங்களுக்கு இடையே சுடுகாடு தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், திட்டமேடு பகுதியை சேர்ந்த முதியவர் ஏகாம்பரம், கடந்த, 19ல் உயிரிழந்தார். அவரது உடலை தங்களது பகுதியில் உள்ள திட்டமேடு சுடுகாடு வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என, ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., ]]]லெனின், தாசில்தார் கோவிந்தசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதி சடங்கு நடந்தது.இந்நிலையில், நேற்று மீண்டும் திட்டமேடு பகுதியை சேர்ந்த நடேசன் மனைவி தங்கமணி, 75, இறந்தார். அவரது உடலை தங்கள் பகுதி வழியாக எடுத்து செல்லக்கூடாது என, மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சமரசம் ஏற்படாததால், டி.எஸ்.பி., சங்கீதா, தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் இறுதிச்சடங்கு நடந்தது. தொடர்ந்து அப்பகுதியில் சுடுகாட்டு பிரச்னையால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்