உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மயானம் அருகே தேங்கிய மழை நீரால் பாதிப்பு

மயானம் அருகே தேங்கிய மழை நீரால் பாதிப்பு

நாமக்கல் : காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்சாயத்தில் மயானம் அருகே, தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மயானம், புறவழிச்சாலை அருகே அமைந்துள்ளது. இப்பகுதியில் தேங்கும் மழைநீர், அருகில் உள்ள புறவழிச்சாலையை ஒட்டியுள்ள கால்வாயில் செல்வதற்கு சரியான வடிகால் அமைக்கவில்லை. இதனால், மயானத்தில் தேங்கும் மழைநீர், அருகில் உள்ள சாக்கடையில் நிரம்பி சாலை, குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், தண்ணீர் தேங்குவதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக தகவல் பரவியது.தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். டவுன் பஞ்சாயத்து நிர்வாகமும் துாய்மை பணியாளர்கள் மூலம் மழைநீர், கால்வாயில் செல்ல ஏற்பாடு செய்தனர். அரைமணி நேரத்தில் தண்ணீர் வடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை