உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெண்ணந்துார் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

வெண்ணந்துார் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

வெண்ணந்துார்: வெண்ணந்துார் டவுன் பஞ்.,க்கு உட்பட்டது வெண்ணந்துார் ஏரி. இந்த ஏரிக்கு, மின்னக்கல் அருகே உள்ள சொரிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் மழைநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், ஏரிக்கு, வெண்ணந்துார் பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் ஏரியில் உள்ள தண்ணீருடன் கலந்து வருவதால், நிறம் மாறி, கழிவு நீர் ஏரியாகவே மாறிவிட்டது.இதனால், ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதேநேரத்தில், அங்கு மேய்ச்சலுக்காக ஓட்டிவரும் கால்நடைகளும், ஏரியில் கலந்துள்ள கழிவுநீரையே குடிக்கின்றன. இதனால் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி