உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஒன்றியம், நகராட்சி அளவில் இடமாறுதல் கேட்டு ஆர்ப்பாட்டம்

ஒன்றியம், நகராட்சி அளவில் இடமாறுதல் கேட்டு ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஒன்றியம், நகராட்சி அளவில் மட்டும் இடமாறுதல் வழங்க கோரி, நாமக்கல்லில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) நாமக்கல் ஒன்றிய கிளை சார்பில், வட்டார கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய பொருளாளர் சசிகுமார் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஜெயகுமார் தொடக்க உரையாற்றினார். மாநில பொருளாளர் செல்வராசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.அதில், தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகள் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஒன்றிய, நகராட்சி அளவில் மட்டும் இடமாறுதல் வழங்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும், 90 சதவீத ஆசிரியர்களை பாதிக்கும் மாநில பணிமூப்பு திணிப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் மற்றும் வேலுசாமி, ஜீவாசங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை