உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின்வாரிய அலுவலகம் முன் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மின்வாரிய அலுவலகம் முன் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம்: மா.கம்யூ., குமாரபாளையம் நகர குழு சார்பில், குமாரபாளையம் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். அதில், மின்வாரிய துணை இயக்குனர் வல்லப்பதாசிடம், கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மின் வாரியத்தை மூன்றாக பிரித்து, வீடு, விசைத்தறி, விவசாயம் போன்றவற்றிற்கு உள்ள மானியத்தை பறிக்க கூடிய வகையில், முன்பணம் செலுத்தி உச்சபட்ச நேரத்திற்கு கூடுதல் மின் கட்டணம் வசூல் செய்தல், மின் ஊழியர்களுக்கு நிரந்தர ஓய்வூதியம் பறிப்பு, மக்களை பாதிக்கக்கூடிய, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தாமல் நிராகரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், முன்னாள் நகர செயலாளர் ஆறுமுகம், நகர குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை