உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / செல்வ மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்

செல்வ மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்

வெண்ணந்துார்: வெண்ணந்துார் பகுதியில் பிரசித்தி பெற்ற செல்வ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டு திருவிழா, கடந்த, 30ல் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று தீமிதி திருவிழாவையொட்டி, செல்வ மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் ஊரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று, கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். வெண்ணந்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ