உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது

கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது

குமாரபாளையம்: கூடுதல் விலையில் மதுபானம் விற்பனை செய்ய முயன்ற நபரை, போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 17 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குமாரபாளையம் அருகே ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (38). அவர், நேற்று முன்தினம் இரவு சேலம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை ஓரம் சந்தேகத்துக்கு இடமான வகையில் கைப்பையுடன் நின்றிருந்தார். அப்போது அங்கு ரோந்துப் பணி மேற்கொண்ட குமாரபாளையம் போலீஸார், முருகனிடம் விசாரித்தனர். மேலும், கைப்பையை சோதனையிட்டனர். அதில், 1,140 ரூபாய் மதிப்புள்ள, 17 குவாட்டர் மதுபான பாட்டில் இருந்துள்ளது. அவை அனைத்தும் கூடுதல் விலையில் விற்பனை செய்வதற்காக வைத்திருப்பதாக முருகன் தெரிவித்துள்ளார். அதையடுத்து முருகனை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை