மேலும் செய்திகள்
தடுமாறி விழுந்த மூதாட்டி பலி
12-Aug-2025
குமாரபாளையம்: குமாரபாளையம் தொகுதியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறார். பல வேட்பாளர்களை மாற்றியும், தி.மு.க. வெற்றி பெற முடியவில்லை. கடந்த தேர்தலில், தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வகையில், தி.மு.க., வெற்றி பெற்றாலும், குமாரபாளையம் தொகுதியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தான் வெற்றி பெற்றார். இந்நிலையில், நேற்று குமாரபாளையம் தொகுதி, வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் மூர்த்தி, குமாரபாளையம் தொகுதி பார்வையாளர் செல்வம், மாநில விவசாய அணி துணை செயலர் செல்வராஜ், உள்பட பலர் பேசினர். அப்போது, குமாரபாளையம் தொகுதி பார்வையாளர் செல்வன் பேசுகையில், ''நாம் வெற்றி பெறுவது மிகவும் எளிது. நம் கட்சி ஜெயலலிதாவை வெற்றி கண்ட கட்சி. அப்படியிருக்க, இந்த குமாரபாளையம் தொகுதியை வெல்வது கடினமா? இந்த முறை குமாரபாளையம் தொகுதியை, தி.மு.க. கைப்பற்றுவது உறுதி,'' என்றார்.
12-Aug-2025