உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கார்த்திகை விரதத்தால் நாட்டுக்கோழி விலை சரிவு

கார்த்திகை விரதத்தால் நாட்டுக்கோழி விலை சரிவு

ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டை, மோகனுார் பிரிவு சாலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடுகி-றது. இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்தனுார், ப.வேலுார் பகுதியை சேர்ந்த விவசாயிகள், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த வாரம் கோழிகள் வரத்து அதிகரித்தது. இருப்பினும், கார்த்-திகை விரதத்தால், நாட்டுக்கோழி விலை வெகுவாக சரிவடைந்-தது. கடந்த வாரம், ஒரு கிலோ, 500 முதல், 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நாட்டுக்கோழி, தற்போது, 400 முதல், 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ