உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முருங்கை கிலோ ரூ.230க்கு விற்பனை

முருங்கை கிலோ ரூ.230க்கு விற்பனை

ராசிபுரம் உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ, 55 ரூபாய், கத்திரிக்காய், 60, வெண்டை, 50, புடலை, 50, பீர்க்கன், 60, பாகல், 60, சுரைக்காய், 20, பச்சை மிளகாய், 48, முருங்கை, 230, சின்ன வெங்காயம், 52, பெரிய வெங்காயம், 35, முட்டைகோஸ், 35, கேரட், 70, பீன்ஸ், 60, பீட்ரூட், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம், தக்காளி கிலோ, 42 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று 55 ரூபாய்க்கு விற்பனையானது. 32 ரூபாய்க்கு விற்ற வெண்டை, 50 ரூபாய்க்கு விற்றது. முருங்கை வரத்து மிகவும் குறைவாக இருந்தது. 120 கிலோ மட்டுமே நேற்று விற்பனைக்கு வந்திருந்தது. இதனால், கடந்த வாரம் கிலோ, 95 ரூபாய்க்கு விற்ற முருங்கை நேற்று, 230 ரூபாய்க்கு விற்றது குறிப்பிடத்தக்-கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ