உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிட்னி விற்க மூளைச்சலவை டி.எஸ்.பி., நேரில் விசாரணை

கிட்னி விற்க மூளைச்சலவை டி.எஸ்.பி., நேரில் விசாரணை

பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களின் கடன், வறுமை, குடும்ப சூழ்நிலையை சுட்டிக் காட்டி, பணத்தாசை காட்டி கிட்னி விற்பனைக்கு துாண்டில் போடும் புரோக்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், நாமக்கல் கலெக்டர் ஆகியோருக்கு, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., 6வது வார்டு கவுன்சிலர் பாலசுப்ரமணியம் புகார் மனு அனுப்பி இருந்தார். புகார் குறித்து திருச்செங்கோடு டி.எஸ்.பி., இமயவர்மன், நேற்று முன்தினம், பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். புகாரளித்த கவுன்சிலர் பாலசுப்ரமணியம், சம்பந்தப்பட்ட கிட்னி புரோக்கர் ஆகியோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை செய்தார். மேலும், சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ