நாமக்கல்: 'நாளை நடக்கும் தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், கட்சியினர் தவறாமல் பங்கேற்க வேண்டும்' என, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார், எம்.பி., தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், நாளை காலை, 10:00 மணிக்கு, நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில், வரும் ஜூலை, 10ல் விக்கிரவாண்டியில் நடக்கும் சட்டசபை இடைத்தேர்தல் பணியில் பங்கேற்பது, நடந்து முடிந்த நாமக்கல் லோக்சபா தேர்தல் குறித்தும், நிர்வாக காரணங்களுக்காக ஒன்றியங்களை பிரிப்பது, மக்களுடன் திட்டம் மற்றும் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய, டவுன் பஞ்., செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.