உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மண் கடத்தலை தடுக்க விவசாயி வலியுறுத்தல்

மண் கடத்தலை தடுக்க விவசாயி வலியுறுத்தல்

சங்ககிரி: சங்ககிரியில், கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., லோகநாயகி தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:அன்னதானப்பட்டி பழனிசாமி: மன்னாதசாமி கோவில் அருகே மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை, அங்குள்ள விவசாய நிலங்களில் வீசி செல்கின்றனர். இதனால் தினமும் காலி பாட்டில்களை அகற்றும் பணியை செய்ய வேண்டிய நிலை உள்ளது.லோகநாயகி: போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்ககிரி தாலுகா தலைவர் ராஜேந்திரன்: தேவூரில் கற்கள், மண், டிப்பர் லாரிகளில் கடத்திச்செல்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் இரவில் சோதனையில் ஈடுபடும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். லோகநாயகி: உரிய தீர்வு காணப்படும்.தாசில்தார் வாசுகி உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை