உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 100 நாள் வேலை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், நாமக்கல்லில், நுாறு நாள் வேலை கேட்டு, தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின், மாவட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். அதில், 100 நாள் வேலை கொடுக்க வேண்டும். வேலை கொடுக்க முடியாவிட்டால் சட்டப்படி நிவாரணம் கொடுக்க வேண்டும். நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் தீபாவளி போனஸ், 5,000 ரூபாய்- வழங்க வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த நலவாரியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ