நாமக்கல்: அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்-பினர், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்-பாட்டம் நடத்தினர். கூட்டமைப்பின் நிர்வாகிகள் குமார், சரவணகுமார், சரவணன், மாதையன், சுவாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் மகேந்திரகுமார், கோரிக்கையை விளக்கி பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், கடந்த, 2003 முதல் அரசுத்து-றைகளில் பணியாற்றும் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கிராம உதவியாளர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், ஊர்ப்புற நுால-கர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் நிரந்தர கால-முறை ஊதியம் வழங்க வேண்டும். மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மீண்டும் வாழ்வாதாரம் ஏற்படுத்த வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணி-யாற்றி வருவோரை நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை செலவினத்தை மேற்கொள்ள, 100 சதவீதம் காப்-பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்-பினர். மேலும், இந்த கோரிக்கைகளை, தமிழகரசு நிறைவேற்ற வலியுறுத்தி, 2026 ஜன., 6ல், இரண்டாம் கட்டமாக நடக்கும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் அனைத்து துறை சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து-கொள்ள வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.