| ADDED : மே 30, 2024 06:57 AM
ப.வேலுார் : ப.வேலுார் தாலுகா பகுதியில் குண்டுமல்லி, சம்பங்கி, செவ்வந்தி, அரளி, முல்லை பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. பூக்களை அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்துக்கு தினமும் கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் பூக்களை ஏலம் முறையில் வியாபாரிகள் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். கோவில் திருவிழா, திருமண நிகழ்ச்சி, பண்டிகை உள்ளிட்ட விழாக்களின் போது, பூக்களின் விற்பனை உச்சத்தில் இருப்பது வாடிக்கை. மற்ற காலங்களில் அதன் விலை குறைந்து காணப்படும்.திருவிழா மற்றும் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு, கடந்த வாரம், 420 ரூபாய்க்கு விற்ற, ஒரு கிலோ குண்டுமல்லி, நேற்று, 260 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், 100 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 50 ரூபாய், 300 ரூபாய்க்கு விற்ற அரளி, 250 ரூபாய், 450 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ முல்லை பூ, 320 ரூபாய், 400 ரூபாய்க்கு விற்ற செவ்வந்தி, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.