மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
05-Oct-2025
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
திருச்செங்கோடு:திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி குழுமத்தின் நிறுவனர் ரங்கசாமி பிறந்த நாளை, நிறுவனர் தினமாக கொண்டாடினர். பாரதி வித்யா பவன் நிறுவன தாளாளரும், செயலாளருமான ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, ரங்கசாமியின் மார்பளவு உருவச்சிலையை திறந்து வைத்தார். கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன சி.இ.ஓ., அகிலா முத்துராமலிங்கம் வரவேற்றார். அரிமா சங்க முன்னாள் தலைவர் முத்துசாமி, கே.எஸ்.ஆர்., வாழ்க்கை வரலாறை, டிஜிட்டல் புத்தகமாக வெளியிட்டார்.சிற்பி ரஜினி கிருஷ்ணா, மின்நுால் தொகுப்பாளர் கதிர், சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை மருத்துவர்கள் கார்த்திகேயன், புனித், ராஜேஷ், மோகன், மாதீன்ஜாபர் ஆகிய, ஆறு மருத்துவர்களுக்கும், கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனவங்களில் படித்த, 14 முன்னாள் மாணவர்களுக்கும், கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் சேர்மன் சீனிவாசன், ராஜம்மாள் ரங்கசாமி, அமுதா ஆசைத்தம்பி ஆகியார் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.இதேபோல், ஆண்டுதோறும் சிறந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள் என, சேர்மன் சீனிவாசன் தெரிவித்தார்.
05-Oct-2025
05-Oct-2025