நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல-கத்தில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணை-யத்தால் நடத்தப்பட உள்ள குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 போட்டி தேர்வுக்கான, ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்-டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டப்படி, நேரடி-யாக இன்று காலை, 10:30 மணிக்கு துவங்குகிறது.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2024--25ம் ஆண்டு வெளியான தேர்வு முடிவு-களில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், 30 பேர், சீருடைப்பணியாளர் எஸ்.ஐ., தேர்வில், 7 பேர், போலீஸ் தேர்வில், 13 பேர், குரூப்-2ஏ தேர்வில், 7 பேர், எம்.ஆர்.பி., பார்மசிஸ்ட் தேர்வில், 3 பேர், யு.ஜி., டி.ஆர்.பி., தேர்வில், 2 பேர், எஸ்.ஆர்.பி., கூட்டுற-வுத்துறை தேர்வில், 7 பேர், டி.ஆர்.பி., கூட்டுற-வுத்துறை தேர்வில், 21 பேர் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்ப-முள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, 04286 -222260 என்ற தொலைபேசி மூலமோ அல்லது இணையதளம் மூலமாகவோ, மாவட்ட வேலை-வாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு, தங்கள் விபரங்களை பதிவு செய்து-கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.