ப.வேலுார் : ப.வேலுார், பரமத்தி, நல்லுார், கபிலர்மலை அரசு சித்த மருத்துவ பிரிவுகள் மற்றும் அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை இணைந்து நடத்தும், சிறப்பு சித்த மருத்துவ முகாம், நாளை நடக்கிறது. ப.வேலுார், செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில், காலை, 8:30 முதல் மதியம், 1:00 மணி வரை, சித்த மருத்துவ முகாம் நடக்கிறது. முகாமில், 75 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட உள்ளதால், அரசு சித்த மருத்துவ பிரிவில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.மேலும், மருத்துவ முகாம் நடக்கும் இடத்தில், காலை, 7:00 மணிக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. இம்முகாமில் வழங்கப்படும் சிகிச்சைகளான, யாக்கை இலக்கணம், யோகா பயிற்சி, சிரதாரை சிகிச்சை, மண் சிகிச்சை, வாழை இலை குளியல் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. 75 பேருக்கு, சிறப்பு பஞ்ச கர்ம சிகிச்சைகள், கிரியா பயிற்சிகள், சித்த மருந்துகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட உள்ளது. பயனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள, அரசு சித்த மருத்துவ பிரிவு டாக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.