உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விநாயகர் சிலை விற்பனை தீவிரம்

விநாயகர் சிலை விற்பனை தீவிரம்

குமாரபாளையம்: விநாயகர் சதுர்த்தி விழா, வரும் செப்., 7ல் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, 3, 5, 7 ஆகிய நாட்களுக்கு பின், காவிரி ஆற்றில் சிலைகள் கரைக்கப்படும். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, சிறிய அளவிலான சிலைகள் முதல் பெரிய அளவிலான சிலைகள் வரை விற்பனைக்கு அடுக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து, சிலை வியாபாரி கார்த்திகேயன் கூறியதாவது:விநாயகர் சிலைகளை, ஆண்டுதோறும் இறைவனுக்கு செய்யும் ஒரு சேவையாக செய்து வருகிறோம். அரை அடி முதல், 10 அடி வரை சிலைகள் விற்பனை செய்கிறோம். அரசு விதிப்படி, நீரில் எளிதில் கரையும் பொருட்களால், இந்த சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எந்த ரசாயன கலவையும் இதில் பயன்படுத்தப்படவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு துறையின் அறிவுரைப்படி, ஜிகினா வேலைப்பாடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை