உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பூரி சாப்பிட்ட சிறுமி சாவு

பூரி சாப்பிட்ட சிறுமி சாவு

எருமப்பட்டி : எருமப்பட்டி அருகே, முட்டாஞ்செட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன், 44. இவரது மகள் ஹர்ஷிகா, 4. இவருக்கு கடந்த, 17ல் வீட்டில் வைத்து அவரது தாய் பூரி சமைத்து கொடுத்துள்ளார். பூரி சாப்பிட்ட சிறுமி, திடீரென வாந்தி ‍எடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை மீட்டு எருமப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை ‍பெற்று வந்த சிறுமி, நேற்று உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி