உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொளத்துார் சந்தையில் ஆடுகள் விலை சரிவு

கொளத்துார் சந்தையில் ஆடுகள் விலை சரிவு

மேட்டூர்: கொளத்துார் சந்தையில் வெள்ளிதோறும் ஆட்டுச்சந்தை கூடும். ஏராளமான விவசாயிகள் ஆடுகளை கொண்டு வருவர். கடந்த மாதம், 31ல் தீபாவளியால், அதற்கு முந்தைய வாரம், ஆடுகள் விலை, 500 முதல், 1,000 ரூபாய் அதிகரித்தது. இருப்பினும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கினர். தீபாவளி முடிந்த பின், ஆடுகள் விலை சரியத்தொடங்கியது. தொடர்ந்து கடந்த, 16ல் கார்த்திகை பிறந்தது. இதனால் பெரும்பாலான பக்தர்கள், விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்வர். இதனால் நேற்று கூடிய கொளத்துார் சந்தையில் ஆடுகள், 500 முதல், 1,000 ரூபாய் வரை விலை சரிந்தது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'கார்த்திகை, மார்க-ழியில் ஆடுகள் விலை குறைவாகவே இருக்கும். தை இரண்டாம் வாரத்துக்கு பின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை