உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல்லில் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

நாமக்கல்லில் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

நாமக்கல்:எல்லோருக்கும் எல்லாம் என்ற, தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.நாமக்கல் நகராட்சி பூங்கா சாலையில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், அமைக்கப்பட்டிருந்த எல்லோருக்கும் எல்லாம் என்ற பெயரில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில், மகளிர் உரிமைத்திட்டம், நான் முதல்வன் திட்டம், முதல்வரின் காலை உணவு திட்டம், விடியல் பயண திட்டம், தோழி, மக்களுடன் முதல்வர், உங்களை தேடி உங்கள் ஊரில், நீங்கள் நலமா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நாளை மாலை வரை நடக்கும் என, செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.புகையிலை பொருள் விற்பனை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி