உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசுப் பள்ளி ஆசிரியரிடம் 3 துறை அதிகாரிகள் விசாரணை

அரசுப் பள்ளி ஆசிரியரிடம் 3 துறை அதிகாரிகள் விசாரணை

பள்ளிப்பாளையம்:சில்மிஷ ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அலமேடு அரசுப் பள்ளி மாணவியர், அமைச்சர் காரை முற்றுகையிட்டு புகார் செய்தனர். இதையடுத்து, மூன்று துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே அலமேட்டில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.கடந்த 21ம் தேதி அரசு விழாவில் பங்கேற்க வந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் உமா ஆகியோரின் காரை, மாணவியர் மற்றும் பெற்றோர் முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் மாணவியரிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக புகார் செய்தனர்.நேற்று முன் தினம் காலை, 10:00 மணிக்கு பள்ளி கல்வித்துறை, வருவாய் துறை மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பள்ளிக்கு வந்து விசாரித்தனர். இதையறிந்த மாணவியரின் பெற்றோர், 100க்கும் மேற்பட்டோர் பள்ளி முன் திரண்டனர்.அவர்களை வகுப்பறைக்குள் அழைத்துச்சென்ற அதிகாரிகள், பள்ளி செயல்பாடு, தலைமையாசிரியர், ஆசிரியர்களின் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர். பின், மாணவியர், தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர். இதுகுறித்த அறிக்கையை, கலெக்டருக்கு அனுப்ப உள்ளதாகவும், அதன்படி நடவடிக்கை இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை