உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தள்ளுவண்டியான அரசு பஸ்: பயணிகள் கடும் அவதி

தள்ளுவண்டியான அரசு பஸ்: பயணிகள் கடும் அவதி

ப.வேலுார்:ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட், கரூர் டிப்போவில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ப.வேலுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து, கரூர் செல்லும் 1ம் நெம்பர் அரசு டவுன் பஸ் புறப்பட தயாரானது. அப்போது பஸ் ஸ்டார்ட் ஆகாததால், பயணிகள் மற்றும் நடத்துனர் சேர்ந்து சிறிது துாரம் பஸ்சை தள்ளி விட்டு இயக்க வைத்தனர். இதனால் அரை மணி நேரம் தாமதமாக 6:00 மணிக்கு பஸ் புறப்பட்டு, கரூரை நோக்கி சென்றது.இதுகுறித்து பயணிகள் கூறியதாவது.கரூரில் இருந்து, 25 கி.மீ., பயண துாரம் உடைய ப.வேலுாருக்கு பழுதான பஸ்களை இயக்குவதால், பயண நேரம் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிப்படைகின்றனர். பழைய பஸ்களை கைவிட்டு புதிய பஸ்களை வாங்க வேண்டும். போக்குவரத்து கழக நிர்வாகம் கவனித்து, பழுதுகளை நீக்கி பஸ் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்