மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்க அமைப்புக்குழு கூட்டம்
26-Oct-2025
தொட்டிப்பட்டி பஞ்.,ல் 2,000 பனை விதை நடவு
26-Oct-2025
தனியார் அரிசி ஆலையில் மத்திய குழுவினர் ஆய்வு
26-Oct-2025
போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
26-Oct-2025
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தின் மூலம், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல போன் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் சேவைகளை, அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குறைகளை நிவர்த்தி செய்யவும், 'மக்கள் குறைதீர் நாள் முகாம்', ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனிக்கிழமை, வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடக்கிறது.அதன்படி, மாவட்டத்தில் உள்ள, நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் ஆகிய, எட்டு வட்ட வழங்கல் அலுவலகங்களில், அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில், 'மக்கள் குறைதீர் நாள் முகாம்' நேற்று நடந்தது. நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, தாசில்தார் சின்னதம்பி தலைமை வகித்தார். அதில், 33 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.அதேபோல், சேந்தமங்கலம், 24, ராசிபுரம், 31, கொல்லிமலை, 12, திருச்செங்கோடு, 54, குமாரபாளையம், 18, ப.வேலுார், 8, மோகனுார், 17 என, மொத்தம், 197 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
26-Oct-2025
26-Oct-2025
26-Oct-2025
26-Oct-2025