உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாதியில் நின்ற சாக்கடை கட்டுமானம்; ஆக்கிரமிப்பை அகற்ற பா.ஜ., கெடு

பாதியில் நின்ற சாக்கடை கட்டுமானம்; ஆக்கிரமிப்பை அகற்ற பா.ஜ., கெடு

ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டையில் சாக்கடை வடிகால் வசதி அமைக்க, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் நடந்து வந்தன. ஆட்சி மாற்றத்துக்கு பின், கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டன. இதற்கு முக்கிய காரணமாக, சாக்கடை கால்வாய் செல்லும் பகுதியில், தி.மு.க., பிரமுகர்கள் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி கடைகள் அமைத்துள்ளதே ஆகும். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியிட்டதையடுத்து, மண்டல பொறியாளர்கள், வருவாய்த்துறையினர், டவுன் பஞ்., அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும் என, எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், தி.மு.க., பிரமுகர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற மறுத்தனர். அதனால் மேற்கொண்டு பணிகள் எதுவும் நடக்காமல் கிடப்பில் உள்ளன.இதுகுறித்து, பா.ஜ., மாநில வக்கீல் அணி செயலாளர் காந்தி கூறியதாவது: தற்போது பெய்த மழையால், இப்பகுதி வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து சேதப்படுத்தியது. மேலும், சாலையிலேயே மழைநீர் தேங்கி நிற்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாக்கடை கால்வாய் அமைக்காவிட்டால், ப.வேலுார் டவுன் பஞ்., அலுவலகம் மற்றும் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த நேரிடும். இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ