உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவேகானந்தா கல்லுாரியில் இருதய விழிப்புணர்வு பேரணி

விவேகானந்தா கல்லுாரியில் இருதய விழிப்புணர்வு பேரணி

திருச்செங்கோடு, திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில், இருதய தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை, விவேகானந்தா கல்வி நிறுவன சேர்மன் கருணாநிதி, மருத்துவ கல்லுாரி டீன் முருகேசன், இணை நிர்வாக இயக்குனர் அர்த்தநாரீஸ்வரன், வைஸ் சேர்மன் கிருபாநிதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். விழிப்புணர்வு பேரணி, திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கி, முக்கிய வீதி வழியாக சென்று வாலரைகேட் பகுதியில் உள்ள விவேகானந்தா நகர்புற மருத்துவமனை சென்றடைந்தது. இந்த பேரணியில், இருதய மருத்துவர்கள் சந்தோஷ்குமார், பிரியா இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் செந்துார் செல்வம் மற்றும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !