ராசிபுரம், அகில இந்திய ஹாக்கி சம்மேளனம் மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்தும் ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை போட்டி வரும், 28 முதல், டிச., 10 வரை நடக்கிறது. இப்போட்டி, தமிழகத்தில், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை போட்டிகளில், 24 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில், ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலக கோப்பை, தமிழக முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வருகிறது.நேற்று, நாமக்கல் மாவட்டத்திற்கு வந்த இந்த கோப்பைக்கு, ராசிபுரம் அடுத்த பாச்சல் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் வரவேற்பு மற்றும் அறிமுக விழா நடந்தது. அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் துர்கா மூர்த்தி, எம்.பி., ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் கோப்பையை வரவேற்று, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினர். ஹாக்கி போட்டி லோகோவையும் மாணவர்களிடம் வழங்கினர். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., ராமலிங்கம், எம்.பி., மாதேஸ்வரன், கல்லுாரி தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.