உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கள்ளுக்கான தடை நீக்கவில்லை என்றால் 39 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி படுதோல்வி

கள்ளுக்கான தடை நீக்கவில்லை என்றால் 39 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி படுதோல்வி

நாமக்கல்: ''தமிழக அரசு, லோக்சபா தேர்தலை, தேர்தல் ஆணையும் அறிவிப்பதற்கு முன், கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், வரும், லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி படுதோல்வி அடையும்,'' என, கள் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இலக்கை தாண்டி முதலீடு பெற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. வளர்ந்த நாடுகளில் தடைசெய்யப்பட்ட தொழில்களுக்கு, தமிழகத்தில், சிவப்பு கம்பளம் விரித்து விட்டதன் விளைவு, அனைத்தும் மாசடைந்துள்ளது. கள் இறக்குவதையும், பருகுவதையும் அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. அவற்றை உணர்ந்து, தமிழகத்திலும், மதுவிலக்கு, மதுக்கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.லோக்சபா தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன் தமிழக அரசு, கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், வரும் லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி படுதோல்வி அடையும்.தமிழகத்தில், வரும், 21 முதல் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் போல் வெற்றியில் முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை