உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பா.ஜ., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

பா.ஜ., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், பா.ஜ., சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.கோடை வெயில் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால், சாலையில் செல்லும் பொதுமக்கள், பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். வெயிலில் வருபவர்கள் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், பா.ஜ., சார்பில் நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்ட் எதிரே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பழனிவேல் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.மாநில நிர்வாகி லோகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தினமும், 20 லிட்டர் பாலில் தயிர் தயாரித்து, அதில் இருந்து நீர் மோர் ஏற்பாடு செய்கின்றனர். காலை முதல் மாலை வரை பயணிகளுக்கு நீர் மோர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை