உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விளைச்சல் அதிகரிப்பு: குண்டுமல்லி விலை சரிவு

விளைச்சல் அதிகரிப்பு: குண்டுமல்லி விலை சரிவு

ப.வேலுார் : நாமக்கல் மாவட்டம் ப.வேலுாரில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றை விவசாயிகள் பறித்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்துக்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்கின்றனர். கோடையில் குண்டுமல்லி உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் அதிகரிப்பால், மார்க்கெட்டுக்கு அதன் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் கடந்த வாரம் ஒரு கிலோ குண்டுமல்லி, 400க்கு விற்றது, நேற்று, 200 ரூபாயாக சரிந்தது.அதேபோல், 300க்கு விற்ற சம்பங்கி, 200; 300க்கு விற்ற அரளி, 250; 200க்கு விற்ற சாமந்தி, 100 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஜனவரியில் ஒரு கிலோ குண்டுமல்லி, 2,000 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது வெறும், 200 ரூபாயாக சரிந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை