உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 40 தொகுதியில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும்

40 தொகுதியில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும்

நாமக்கல்: கிழக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். செய்தி தொடர்பாளர் டாக்டர் செந்தில், நகர தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்., கட்சியின் அகில இந்திய உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் எம்.பி., பங்கேற்றார்.தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எஸ்.பி.ஐ., வெளியிட்டுள்ள தேர்தல் பத்திர விபரங்களை பார்க்கும்போது, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சில நாட்களிலேயே, அந்த நிறுவனங்கள், ஒரு பெரிய தொகையை, பா.ஜ.,வுக்கு நன்கொடையாக வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. பெரிய ஒப்பந்தம் கிடைக்கும் நிறுவனங்களும், நஷ்டத்தில் இயங்கும் சில நிறுவனங்களும், பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்துள்ளன. இதில் இருந்து, பெரிய ஊழல் நடந்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது.உச்சநீதிமன்றம் விபரங்களை மட்டும் கேட்டால் போதாது. இந்நிறுவனங்களுக்கு யார் முதலாளி என்பதை கண்டறிய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும், 'இண்டியா' கூட்டணி வெற்றி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை