வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஜாபர் சாதிக் பணமும், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகமும் ...... பகீர் புகார் கிளப்பிய அண்ணாமலை ..... மூன்று நாட்களுக்கு முன்பு வந்த இந்த செய்திக்கும் நீதிபதி விலகலுக்கும் தொடர்பு இருக்காது என்று நம்புவோம் ......
சென்னை, டிச. 20-சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரின் சகோதரரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால், கடந்த மார்ச்சில் சென்னையை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, சகோதரர் முகமது சலீம், திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் மீது, அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 பேர் மீது அமலாக்கத்துறை 302 பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் தரப்பில் ஜாமின் கோரி, சென்னை கூடுதல் சி.பி.ஐ., நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாணை, நீதிபதி எழில்வேலவன் முன் நடந்து வந்தது. அப்போது, இருவருக்கும் ஜாமின் வழங்க அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை தள்ளிவைத்தார். இந்நிலையில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் இருவருக்கும் ஜாமின் வழங்க முடியாது என்று தெரிவித்து, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஜாபர் சாதிக் பணமும், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகமும் ...... பகீர் புகார் கிளப்பிய அண்ணாமலை ..... மூன்று நாட்களுக்கு முன்பு வந்த இந்த செய்திக்கும் நீதிபதி விலகலுக்கும் தொடர்பு இருக்காது என்று நம்புவோம் ......