உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நகை பணம் திருட்டு

நகை பணம் திருட்டு

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராஜா, 34; தேங்காய் வியாபாரி. இவரும், இவரது மனைவியும், கடந்த, 3 காலை, 9:30 மணிக்கு சேலம் சென்றனர். இவரது பெற்றோர், வீட்டை பூட்டிவிட்டு, பள்ளிப்பாளையம் சென்றனர். பின், மாலை, 3:30 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, தங்க மோதிரம், செயின், வளையல், கம்மல் உள்ளிட்ட, ஐந்தரை பவுன் தங்க நகை, 80,000 ரூபாயை திருடி சென்றது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து புகார்-படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ