உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எக்ஸல் கல்லுாரியில் காமராஜர் பிறந்தநாள் விழா

எக்ஸல் கல்லுாரியில் காமராஜர் பிறந்தநாள் விழா

குமாரபாளையம்: குமாரபாளையம் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ்துறை சார்பில், காமராஜரி-ன், 123-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன், துணைத்தலைவர் மதன் கார்த்திக் ஆகியோர் வழிகாட்டுதல்படி, எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் விமல் நிஷாந் தலைமை வகித்தார்.உள் தர மதிப்பீடு பிரிவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஷங்கர், புலன் முதன்மையர் மஞ்சுளா ஆகியர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ரகு, வரவேற்றார். தொடர்ந்து புலன் முதன்மையர் மஞ்சுளா சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில், கவிதை, கட்டுரை, ஓவிய போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தமிழ்த்துறை சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழ்த்துறை பேராசிரியர் கார்த்திக் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை