உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜூன் 3ல் கருணாநிதி பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்க தீர்மானம்

ஜூன் 3ல் கருணாநிதி பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்க தீர்மானம்

நாமக்கல், : கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பேசினார்.கூட்டத்தில், வரும் ஜூன், 3ல், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு மற்றும் பிறந்த நாளை, கிழக்கு மாவட்டம் முழுதும், நகராட்சி, டவுன் பஞ்., கிராம பஞ்.,கள் தோறும், கட்சிக்கொடி ஏற்றி வைத்து, கருணாநிதியின் படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தி சிறப்பாக கொண்டாட வேண்டும். நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பொதுமக்கள், முதியோர், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கும், தேவையான மருத்துவ உதவிகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுகள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில நிர்வாகிகள் நக்கீரன், ராணி, முன்னாள் எம்.எல்.ஏ., சரஸ்வதி, மாவட்ட மகளிரணி செயலாளர் ராணி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்ரமணியம், அசோக்குமார், நவலடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை