உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வானவில் மன்ற செயல்பாடு துவக்கம்

வானவில் மன்ற செயல்பாடு துவக்கம்

நாமக்கல்,:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 6 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான வானவில் மன்ற பள்ளி செயல்பாடுகளின் துவக்கம், நாமக்கல் வட்டார வளமையத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். அனைத்து கருத்தாளர்களுக்கும் கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.'அறிவியல் மற்றும் கணிதத்தில் மாணவர்கள் கேள்வி கேட்கும் திறன், சிந்தனையை துாண்டும் வகையில் வானவில் மன்ற செயல்பாடுகள் நடக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை