உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ராசிபுரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ராசிபுரம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பணியாற்றி வரும் வக்கீல் வாஞ்சிநாதனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி, வக்கீல்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், நேற்று, 30க்கும் மேற்பட்ட வக்கீல்கள், வாஞ்சிநாதனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிறிது நேரத்திற்கு பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை