உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தீவனம் ஏற்றி வந்த லாரி டிரைவர் சாவு

தீவனம் ஏற்றி வந்த லாரி டிரைவர் சாவு

நாமகிரிப்பேட்டை, நகோழித்தீவனம் ஏற்றி வந்த லாரி டிரைவர் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்து பலியானார்.நாமக்கல், மோகனுார் பரளி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 59; லாரி டிரைவர். இவர், நேற்று நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள ஆயில்பட்டி, சாலக்காடு பகுதியை சேர்ந்த பாலசுப்பரமணி தோட்டத்தில் கோழித்தீவனம் இறக்கி கொண்டிருந்தார்.]]அப்போது, பழனிசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு ராசிபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பழனிசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை